அம்மா.. அம்மா.. என அலறிய குழந்தைகள்..! நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா..? சிறையிலிருந்து வெளியில் வந்த 24 மணி நேரத்தில் கொடூரம்…! சிவகங்கையை உலுக்கிய பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அம்மா.. அம்மா.. என அலறிய குழந்தைகள்..! நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா..? சிறையிலிருந்து வெளியில் வந்த 24 மணி நேரத்தில் கொடூரம்…! சிவகங்கையை உலுக்கிய பகீர் பின்னணி..!!

Published

on

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகேயுள்ள சொட்டதட்டி கிராமத்தைச் சேர்ந்த 29 வயதுடைய யோகராஜன் என்ற கருவாயன் என்பவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததால், மதுரை சிலைமான் காவல் எல்லைக்குட்பட்ட புகாரின் பேரில் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டு சிறைவாசத்திற்குப் பிறகு நேற்று முன்தினம் வெளியில் வந்த அவர், நேற்று காலை தனது வீட்டிற்கு சென்றுள்ளார். சிறையில் இருந்தபோது தன்னை ஜாமீனில் எடுக்க மனைவி பாண்டிச்செல்வி முயற்சி செய்யவில்லை என்றும், பெற்றோர் மட்டுமே அலைந்தனர் என்றும் யோகராஜன் மனக்கசப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டிற்கு வந்த யோகராஜனுக்கும் அவரது மனைவி பாண்டிச்செல்விக்கும் இடையே காலை முதலே இதுதொடர்பாக தகராறு நீடித்து வந்தது. மாலையில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த யோகராஜன்  “நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா” என கேட்டு வீட்டில் இருந்த அரிவாளால் பாண்டிச்செல்வியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களது குழந்தைகள் யோகமித்ரன், தீனா ஆகியோரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் யோகராஜன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

Advertisement

தகவலறிந்து வந்த கீழடி காவல்துறையினர் பாண்டிச்செல்வியின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மானாமதுரை துணைக் காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் மற்றும் கீழடி காவல் ஆய்வாளர் மயில் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, தப்பியோடிய யோகராஜனைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சிறையிலிருந்து வந்த மறுநாளே மனைவியைக் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in