சூரஜ்கரில் பயங்கரம்..! வீட்டில் இருந்த இரும்புப் பெட்டிக்குள்… பெண் பிணமாக மீட்பு …!கணவர் மீது சந்தேகம்..! பின்னணி என்ன..?! – cinefeeds
Connect with us

CRIME

சூரஜ்கரில் பயங்கரம்..! வீட்டில் இருந்த இரும்புப் பெட்டிக்குள்… பெண் பிணமாக மீட்பு …!கணவர் மீது சந்தேகம்..! பின்னணி என்ன..?!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள சூரஜ்கர் பகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில், வீட்டில் இருந்த இரும்புப் பெட்டிக்குள் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் ‘சிலோச்சனா’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். பெட்டிக்குள் சடலம் இருப்பதாகத் தகவல் பரவியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.

இக்கொலை தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கணவர் ‘கிஷன்’ மீது உறவினர்கள் தீவிர குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். பெண்ணைக் கொலை செய்த பிறகு, குற்றத்தை மறைப்பதற்காக உடலை வீட்டிலிருந்த பெரிய பெட்டிக்குள் அடைத்து வைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு சுமார் மூன்று நாட்களுக்கு முன்பே கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கருதப்படுகிறது.

Advertisement

தகவலறிந்து வந்த சூரஜ்கர் காவல் நிலைய அதிகாரி ராம்சிங் யாதவ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, தடயங்களைச் சேகரித்தனர். சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறை, உடற்கூறாய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும் எனக் கூறியுள்ள காவல்துறையினர், வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in