CRIME
அடி தாங்க முடியாமல் கதறிய பெண்…! தெருவில் தரதரவென இழுத்துச் சென்ற கணவன்… இறுதியில் காத்திருந்த பயங்கரம்..!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கொட்டகை போடும் தொழில் செய்து வந்தார். இவர் தனது தொழில் தேவைக்காக தென்னை ஓலை வாங்கச் சென்றபோது, சாக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த உய்யவந்தாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாள்பட இந்த பழக்கம் காதலாக மாறியதை அடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டு சாக்கோட்டையில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்றும் வழக்கம் போல் இருவருக்கும் இடையே தகராறு எழுந்ததில் ஆத்திரமடைந்த பிரகாஷ், உய்யவந்தாளைக் கடுமையாகத் தாக்கினார். வலி தாங்க முடியாமல் வீட்டில் இருந்து அலறிக்கொண்டு தெருவுக்கு ஓடிவந்த உய்யவந்தாளைத் துரத்திச் சென்ற பிரகாஷ், அவரது தலைமுடியைப் பிடித்து மீண்டும் வீட்டுக்குள் தரதரவென இழுத்துச் சென்றார்.
அவ்வாறு இழுத்துச் சென்றபோது, அங்கிருந்த கல்தூணில் உய்யவந்தாளின் தலை பலமாக மோதியதில் அவர் மயங்கி விழுந்தார். பிரகாஷ் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றபோதும், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்துவிட்டதை உணர்ந்த பிரகாஷ், அவரது உடலைப் போர்வையால் மூடிவிட்டு காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
