LATEST NEWS
சுவாசம் நிற்கவில்லை… இது நாடகம்..! பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி சிக்கியது எப்படி..? லீக்கான மெடிக்கல் ரிப்போர்ட்..! தற்கொலை முயற்சியில் வெளியான பகீர் திருப்பம்..!!
ஹைதராபாத்தில் உள்ள தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய் கிருஷ்ணா ரெட்டி மீது, அவருடன் பயிற்சி பெறும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ரகசிய வீடியோ பதிவு, மிரட்டல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட கடுமையான புகார்களை அளித்தார். இதன் பேரில் அட்டாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த உதய் ரெட்டி, முன்னர் காவலராகப் பணியாற்றி, பின்னர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலை மற்றும் வழக்கு விசாரணைகளால் மன உளைச்சலுக்கு ஆளான உதய் ரெட்டி, திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி மயக்க நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது இரத்த மாதிரி பரிசோதனையில் எந்தவித நச்சுப்பொருளும் கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர். இதனால், வழக்கின் தீவிரத்தைக் குறைக்கவும் மக்களின் அனுதாபத்தைப் பெறவும் அவர் நடத்திய “தற்கொலை நாடகம்” இதுவென காவல்துறை சந்தேகிக்கிறது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அந்தப் பெண் அதிகாரியுடன் தனக்கு ஓராண்டாக இருந்த உறவு குறித்த ஆதாரங்களை அவரது கணவருக்கு அனுப்பியதால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே இப்புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் உதய் ரெட்டி தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தேசிய காவல் அகாடமி மற்றும் காவல்துறையினர் தனித்தனியாக விசாரணைக் குழுக்கள் அமைத்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் உதய் ரெட்டியின் செல்போன் தரவுகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
