ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்..! பட்ஜெட்டில் காத்திருக்கும்… அந்த 2 மெகா சர்ப்ரைஸ்… யாருக்கெல்லாம் தெரியுமா..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்..! பட்ஜெட்டில் காத்திருக்கும்… அந்த 2 மெகா சர்ப்ரைஸ்… யாருக்கெல்லாம் தெரியுமா..?!

Published

on

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தனது முதலாவது பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கான இறுதிக்கட்டப் பணிகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரும் அமைச்சர்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

வரவிருக்கும் இந்த பட்ஜெட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் பல்வேறு முக்கியத் தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறவுள்ளன. குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம், ஆண்டுக்கு 6 இலவசச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் மற்றும் மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் ஆகியவை இதில் செயல்படுத்தப்பட உள்ளன.

Advertisement

மேலும், இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கும் திட்டமும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் வருவாயை அதிகரிப்பதோடு, பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை எந்தவிதத் தொய்வுமின்றிச் செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்புகளின் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை அரசு மேலும் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in