எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செஞ்சிட்டு… மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது கேலிக் கூத்தானது… உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செஞ்சிட்டு… மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது கேலிக் கூத்தானது… உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி..!!

Published

on

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒரு கட்சியில் வெற்றி பெற்றவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மற்றொரு கட்சியில் உடனடியாக மீண்டும் போட்டியிடுவது என்பது ஒரு கேலிக் கூத்தானது என்று நீதிமன்றம் சாடியுள்ளது.

பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது என்பது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் நீதிபதிகள் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இத்தகைய செயல்களைத் தடுக்க உரிய விதிமுறைகளை வகுப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

இருப்பினும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க வழி இல்லை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போதைய இடைத்தேர்தல் களத்தில் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in