LATEST NEWS
வரலாற்றில் முதன்முறை..! “சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்த முதல் பெண்!” – மாற்றுப் பேரவைத் தலைவர் சத்யபாமா படைத்த புதிய வரலாற்றுச் சாதனை..!
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தி, மாற்றுப் பேரவைத் தலைவர் சத்யபாமா புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் இல்லாத நேரங்களில் அவையை நடத்துவதற்காக நியமிக்கப்படும் மாற்றுப் பேரவைத் தலைவர்கள் குழுவில் உள்ள இவர், பேரவைக் கூட்டத்தை மிகச் சிறப்பாக வழிநடத்தினார்.
இதன் மூலம் தமிழக சட்டப்பேரவை வரலாற்றிலேயே சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து அவையை நடத்திய முதல் பெண் என்ற பெருமையையும், வரலாற்றுப் பதிவையும் சத்யபாமா தனதாக்கிக் கொண்டுள்ளார். இந்தத் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு அவையில் இருந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்றுள்ளது.
