“அம்மா என்னை மன்னிச்சுடுங்க..” 15-வது மாடியில் இருந்து குதித்த 16 வயது மாணவி..! தற்கொலை கடிதத்தில் இருந்த அதிர்ச்சி உண்மை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அம்மா என்னை மன்னிச்சுடுங்க..” 15-வது மாடியில் இருந்து குதித்த 16 வயது மாணவி..! தற்கொலை கடிதத்தில் இருந்த அதிர்ச்சி உண்மை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய்நகர் பகுதியில் உள்ள ‘கௌர் சித்தார்தம்’ குடியிருப்பு வளாகத்தில், செவ்வாய்க்கிழமை மாலை 15-வது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மாலை சுமார் 6:30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. மாலை 7 மணியளவில் அவசர உதவி எண் மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், படுகாயமடைந்த அச்சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த சிறுமி அதே குடியிருப்பின் ‘ஐ’ டவரில் வசித்து வந்தது தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்தில் இருந்து ஒரு தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், கல்வி மற்றும் படிப்பு தொடர்பான மன அழுத்தம் காரணமாகவே தான் இந்த முடிவை எடுத்ததாக அச்சிறுமி குறிப்பிட்டுள்ளார். இந்த தற்கொலைக் கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்தும், அதில் எழுதப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும் காவல்துறை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

Advertisement

சம்பவம் குறித்து விஜய்நகர் காவல் நிலைய ஆய்வாளர் தர்மபால் சிங் தெரிவிக்கையில், சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார். சிறுமி 15-வது மாடிக்கு எவ்வாறு சென்றார், சம்பவத்திற்கு முன்பாக அவருடைய நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்தும் தடயங்களைச் சேகரித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உயிரிழப்பிற்கான முழுமையான காரணங்கள் தெரியவரும் என்றும், தற்கொலைக் கடிதத்தின் அடிப்படையில் கல்வி அழுத்த கோணத்துடன் சேர்த்து மற்ற அனைத்து சாத்தியக்கூறுகளையும் வைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்வதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in