LATEST NEWS
அய்யோ கொடுமையே… திருநங்கையோடு கணவன் அடித்த கூத்து… கண்டித்த மனைவியை 3 தலாக் கூறி வீட்டை விட்டு துரத்திய கொடூரம்…! நீதி கேட்டு பெண் போராட்டம்…!!
ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த நாஜியா என்ற பெண்ணுக்கும், முசாபர்நகரின் சிவில் லைன் பகுதியைச் சேர்ந்த இஸ்திகார் பேக் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் தங்களால் இயன்ற சீர்வரிசையைக் கொடுத்தபோதிலும், கணவர் வீட்டாரால் அதில் திருப்தியடைய முடியவில்லை. இதனால் திருமணத்திற்குப் பிறகு நாஜியாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தத் தொடங்கினர். இந்தத் தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், வரதட்சணைக் கோரிக்கையை பூர்த்தி செய்யாததால் நாஜியா தொடர்ந்து கணவர் குடும்பத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
நாஜியாவின் கணவர் இஸ்திகார் பேக்கிற்குத் திருமணத்திற்கு முன்பிருந்தே ‘ஜோயா’ என்ற திருநங்கையுடன் சட்டவிரோதத் தொடர்பு இருந்துள்ளது. இஸ்திகார் பலமுறை அந்தத் திருநங்கையைத் தன் வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார். இதைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்த நாஜியாவை கணவர் அடித்துத் துன்புறுத்தியுள்ளார். ஜூன் 2-ஆம் தேதி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நாஜியாவைத் தாக்கி, துப்பட்டாவால் அவரது தொண்டையை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளனர். இதில் மயக்கமடைந்த நாஜியா, சுயநினைவு திரும்பியதும் தன் மாமாவிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அவர் நேரில் வந்து நியாயம் கேட்டபோது, இஸ்திகார் பேக் அனைவரின் முன்னிலையிலும் நாஜியாவிற்கு ‘மூன்று தலாக்’ கூறி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.
மூன்று தலாக் கூறி நாஜியாவை வீட்டை பூட்டி வெளியேற்றிய இஸ்திகார் பேக், கடந்த நான்கு மாதங்களாகத் தன் 3 குழந்தைகளைப் பற்றியும் விசாரிக்காமல், அந்த திருநங்கையுடன் தலைமறைவாகிவிட்டார். நாஜியாவிடம் கணவரும் அந்தத் திருநங்கையும் ஒன்றாக இருக்கும் வீடியோ ஆதாரங்களும் உள்ளன. தற்போது 3 குழந்தைகளுடன் ஆதரவின்றிக் தவிக்கும் நாஜியா, தன் தாய் வழி உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், தனக்கும் தன் குழந்தைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும், மூன்று தலாக் கூறித் தப்பி ஓடிய கணவர் மற்றும் வரதட்சணைக் கொடுமை செய்த மாமியார் வீட்டார் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி முசாபர்நகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
