“கொஞ்சமாவது பயம் இருக்காடா உங்களுக்கு… ஒரே பைக்ல 6 பேரையும் ஏத்திக்கிட்டு கெத்து காட்டிய மாணவர்கள்… வைரல் வீடியோவை பார்த்துட்டு போலீஸ் கொடுத்த மரண ஆப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கொஞ்சமாவது பயம் இருக்காடா உங்களுக்கு… ஒரே பைக்ல 6 பேரையும் ஏத்திக்கிட்டு கெத்து காட்டிய மாணவர்கள்… வைரல் வீடியோவை பார்த்துட்டு போலீஸ் கொடுத்த மரண ஆப்பு..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்..!டில், ஒரே மோட்டார் சைக்கிளில் ஆறு பள்ளி மாணவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில், ஒரு மாணவர் இருசக்கர வாகனத்தை ஓட்ட, நான்கு மாணவர்கள் அவருக்குப் பின்னால் நெரிசலாக அமர்ந்துள்ளனர். மேலும், ஐந்தாவது மாணவரின் தோள் மீது ஆறாவது மாணவர் அமர்ந்துகொண்டு பொதுச்சாலையில் ஆபத்தான முறையில் பயணிப்பது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ போக்குவரத்து விதிகளை மீறியதுடன், சாலைப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மீரட் போக்குவரத்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது குறித்துப் பேசிய மீரட் போக்குவரத்துப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா, அந்த வாகனத்திற்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் இதுபோன்று இருசக்கர வாகனங்களை இயக்குவது முற்றிலும் தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

சிறுவர்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்களின் பெற்றோர்களே முழு பொறுப்பு என்று தெரிவித்த காவல்துறை அதிகாரி, அவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றிச் செல்வது வாகனத்தின் கட்டுப்பாட்டைப் பாதித்து பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும், இந்தச் சம்பவம் மைனர்கள் வாகனம் ஓட்டுவது மற்றும் பெற்றோர் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுவதாகவும் அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in