CRIME
“அடச்சீ நீயெல்லாம் மனுஷியா..?” மனைவி செய்த ‘அந்த’ தப்பு.. மன்னிப்புக் கொடுத்த கணவனுக்கு போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
மேற்கு வங்காளத்தில் பணியாற்றி வந்த நைன் சிங் ஜாதவ் என்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், தனது மனைவி மற்றும் கள்ளக்காதலனின் கூட்டுச் சதியால் வாடகைக்கொலையாளி மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நைன் சிங்கிற்கு கோமல் என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கோமலுக்கு அவரது உறவினர் கணவரான குல்ஷன் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் நைன் சிங்கிற்குத் தெரியவந்தபோது, அவர் தனது குடும்பத்தின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மனைவியை மன்னித்து அறிவுரை கூறியுள்ளார். ஆனால், கள்ளக்காதலைத் தொடர விரும்பிய கோமலும் அவரது கள்ளக்காதலனும், நைன் சிங்கைத் தீர்த்துக்கட்டவும், அந்தப் பழியைத் தங்களுக்கு நிலத் தகராறு இருந்த ஊரைச் சேர்ந்த ஒரு ராஜபுத்திர குடும்பத்தின் மீது போடவும் ஒரு பயங்கரமான சதியைத் தீட்டினர்.
இதற்கிடையில் நைன் சிங் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தபோது, வாடகைக்கொலையாளி ஒருவன் வீட்டிற்குள் புகுந்து அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். திட்டமிட்டபடி, கோமல் இந்தத் கொலைப் பழியைத் தங்களுக்கு நிலத் தகராறு இருந்த ராஜபுத்திர குடும்பத்தின் மீது சுமத்தினார்; அதன் அடிப்படையில் போலீசார் தொடக்கத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் காவலில் எடுத்து விசாரித்து பின்னர் விடுவித்தனர். எனினும், காவல்துறையினர் மின்னணு மற்றும் மொபைல் கண்காணிப்பு மூலம் தீவிர விசாரணை நடத்தியபோது, கோமலுக்கும் குல்ஷனுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் அனைத்தும் சிக்கின. தனது கணவரைக் கொல்வதற்காகக் கோமல் தன் நகைகளை விற்று 6 லட்சம் ரூபாய் திரட்டி வாடகைக்கொலையாளியிடம் கொடுத்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
