CRIME
“உன்னை வெட்டி திருச்செந்தூர் கடல்ல கரைச்சிருவேன்” போலீஸ் மிரட்டிய மறுநாளே வாலிபர் முகம் சிதைத்து கொடூர கொலை.. திருவொற்றியூரில் பயங்கரம்..!!
“உன்னை வெட்டி, திருச்செந்தூர் கடல்ல கரைச்சிருவேன்” என்று கந்துவட்டி ரவுடிக்கு ஆதரவாகக் காவல் ஆய்வாளர் தன்னை மிரட்டுவதாக நேற்று முன்தினம் பரபரப்புப் பேட்டி அளித்திருந்த பிரதீப் ராஜ் (28), நேற்றிரவு மர்ம நபர்களால் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். காவல் துறை அதிகாரி ஒருவரே ரவுடிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டுத் தன்னை மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட வாலிபர் ஊடகங்கள் வாயிலாகப் பகிரங்கக் குற்றம் சாட்டிய சில மணி நேரங்களிலேயே இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டுத் தனக்குப் பாதுகாப்புத் தேடிப் போராடிய பிரதீப் ராஜ், காவல் துறையின் அலட்சியம் மற்றும் மிரட்டல் காரணமாகவே தற்பொழுது கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினரும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பின்மை குறித்த கடுமையான அச்சத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
