“சி.எம்-ட்ட வேணும்னா போய் சொல்லு, என்ன ஒன்னும் பண்ண முடியாது” உங்கள “DUMMY CM” ன்னு நினைக்குறாங்களா போலீஸ்..? உதயநிதி ஸ்டாலின் கேள்வி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சி.எம்-ட்ட வேணும்னா போய் சொல்லு, என்ன ஒன்னும் பண்ண முடியாது” உங்கள “DUMMY CM” ன்னு நினைக்குறாங்களா போலீஸ்..? உதயநிதி ஸ்டாலின் கேள்வி..!!

Published

on

சென்னை திருவொற்றியூரில் வாலிபர் பிரதீப்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்வைத்து, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் காவல் துறையின் செயல்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளும் தவெக அரசு மீது கடுமையான விவாதத்தை எழுப்பியுள்ளார். கந்துவட்டி ரவுடிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட திருவொற்றியூர் காவல் ஆய்வாளர், கொலை செய்யப்படுவதற்கு ஒருநாள் முன்பு பிரதீப்ராஜிடம், “சி.எம்-ட்ட வேணும்னா போய் சொல்லு, என்னை ஒன்றும் பண்ண முடியாது” என்று திமிராகக் கூறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவல்துறைக்கு நேரடியாகப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய்யை, அவரது சொந்தத் துறையைச் சேர்ந்த போலீசாரே “DUMMY CM” ஆக நினைக்கிறார்களா? என்று உதயநிதி ஸ்டாலின் மிகக் காட்டமான கேள்வியையும் விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்பொழுது அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவதுடன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதற்கு இச்சம்பவமே சாட்சி என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in