CRIME
இவளெல்லாம் ஒரு தாயா..? தாயின் கள்ளக்காதலைக் கண்ட 5 வயது மகன்… மாடியிலிருந்து தூக்கி வீசிக் கொன்ற கொடூரம்… 24 மணி நேரம் உயிருக்கு போராடி பிரிந்த உயிர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கள்ளக்காதலை மறைப்பதற்காகப் பெற்ற தாயே தனது 5 வயது மகனைக் மாடியில் இருந்து தூக்கி வீசிக் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள போத்புரா பகுதியைச் சேர்ந்த ஜோதி ரத்தோர் என்ற பெண், தனது அண்டை வீட்டில் வசிக்கும் உதய் இந்தோலியா என்ற வாலிபருடன் சட்டவிரோதக் காதலில் இருந்துள்ளார். ஒருநாள் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை, ஜோதியின் 5 வயது மகன் ஜதின் தற்செயலாகப் பார்த்துள்ளான்.
தங்களின் இந்த விவகாரம் கணவருக்குத் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில், ஜோதி மற்றும் அவரது கள்ளக்காதலன் உதய் ஆகிய இருவரும் இணைந்து அந்தப் பச்சிளம் குழந்தையைக் கொடூரமாக வீட்டின் கூரையிலிருந்து கீழே தூக்கி வீசினர். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ஜதின், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு உயிருக்குப் போராடியபடி சுமார் 24 மணி நேரம் மரண வேதனையை அணு அணுவாக அனுபவித்த அந்தச் சிறுவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
பெற்ற தாயே காம வெறியால் தனது சொந்த மகனைக் கொன்ற இந்தத் துயரச் சம்பவம், அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. தனது மகனின் இந்த அகால மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத அவனது தந்தை, பல நாட்களாகக் கண்ணீர் விட்டு அழுது கதறி வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கள்ளக்காதல் ஜோடியான ஜோதி ரத்தோர் மற்றும் உதய் இந்தோலியா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
