“விக்கல் வந்து செத்துட்டா” 6 மாத கர்ப்பிணியைத் துப்பட்டாவால் நெரித்துக் கொன்ற நாத்தனார்கள்.. பகீர் கொலை நாடகம் அம்பலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“விக்கல் வந்து செத்துட்டா” 6 மாத கர்ப்பிணியைத் துப்பட்டாவால் நெரித்துக் கொன்ற நாத்தனார்கள்.. பகீர் கொலை நாடகம் அம்பலம்..!!

Published

on

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆறு மாத கர்ப்பிணியான சந்தியா (21) கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நாத்தனாரின் தகாத உறவு குறித்து சந்தியா கணவரிடம் கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொலை அரங்கேறியது தெரியவந்தது.

மாமியார் மற்றும் நாத்தனார்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் தொலைக்காட்சி சத்தத்தை அதிகமாக வைத்துவிட்டு, சந்தியாவைத் துப்பட்டாவால் நெரித்துக் கொன்றுள்ளனர். பின்னர் அவர் விக்கல் ஏற்பட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in