காதலியை நிர்வாணமாக வீடியோ காலில் வரவைத்து… ஸ்கிரீன்ஷாட் எடுத்து.. ஜிம் மாஸ்டர் செய்த் கொடூரம்… கொத்தாக தூக்கிய போலீசார்..!! – cinefeeds
Connect with us

CRIME

காதலியை நிர்வாணமாக வீடியோ காலில் வரவைத்து… ஸ்கிரீன்ஷாட் எடுத்து.. ஜிம் மாஸ்டர் செய்த் கொடூரம்… கொத்தாக தூக்கிய போலீசார்..!!

Published

on

சென்னை நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, 2024-ஆம் ஆண்டு வீட்டின் அருகே உள்ள உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தபோது, அங்கு பணியாற்றிய ஓட்டேரியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் இம்தியாஸ் ஷெரீப் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தார். நாளடைவில், உடைகள் மற்றும் நட்புகள் குறித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததால், அந்த மாணவி அவரிடமிருந்து விலகத் தொடங்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த இம்தியாஸ் ஷெரீப், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி மாணவியை வீடியோ காலில் பேச வைத்துள்ளார். பின்னர் மீண்டும் தற்கொலை மிரட்டல் விடுத்து, அவரை ஆடையின்றி வரவழைத்து மறைமுகமாக ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்துக்கொண்டு, அதை வைத்து தனிமையில் வரச்சொல்லி மிரட்டியுள்ளார்.

Advertisement

இதனால் அதிர்ச்சியடைந்த அம்மாணவி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், ஜிம் மாஸ்டர் இம்தியாஸ் ஷெரீப்பைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in