CRIME
பகீர்..! 7 ஆண்டு காதல் திருமணம் கொடூரக் கொலையில் முடிந்தது.. மனைவியின் மூக்கை அறுத்து, கழுத்தை அறுத்த கணவன்.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரில் காதல் திருமணம் செய்துகொண்ட ஜோதி சௌராசியா என்ற பெண், அவரது கணவராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு லக்கன் ஜோஷி மற்றும் ஜோதி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தொடக்கத்தில் இவர்களது வாழ்க்கை நன்றாகச் சென்றாலும், நாளடைவில் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு கடும் அன்யோன்யம் குறைந்து போனதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தம்பதியினருக்கு இடையே குழந்தைகள் யாருடன் இருக்க வேண்டும் என்ற கடுமையான விவாதம் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. கணவன் லக்கன் ஜோஷி குழந்தைகள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று வற்புறுத்திய நிலையில், ஜோதி அதற்கு முரண்பட்டுக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்குள் ஒரு நில விவகாரமும் கொலையின் பின்னணியாக இருந்திருக்கலாம் எனப் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆத்திரத்தில், கணவன் லக்கன் ஜோஷி தனது நண்பனான சோனு குஷ்வாஹா என்பவருடன் சேர்ந்து மனைவியைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார். திட்டத்தின்படி இருவரும் சேர்ந்து ஜோதியைத் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். முடிந்ததும் உத்திரப் பிரதேசத்திற்குத் தப்பியோட முயன்ற இருவரையும், சத்தர்பூர் சிவில் லைன் போலீசார் எல்லைப் பகுதியில் சுற்றி வளைத்துக் கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
