CRIME
“பெற்றோர்களே உஷார்.. திடீரென மயங்கி விழுந்த 1 வயது குழந்தை.. தொண்டையில் சிக்கிய பிஸ்கட்… அடுத்த நொடியே நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் அத்தக்கல் மண்டலம் சுர்த்தி கிராமத்தில், பிஸ்கட் தொண்டையில் சிக்கியதில் ஒரு வயதுக் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. இரண்டு மகன்களைக் கொண்ட மௌனிகா தம்பதியினருக்கு மூன்றாவதாகப் பிறந்த ஒரு வயதுக் குழந்தைதான் இந்த விபத்திற்குப் பலியாகியுள்ளது. நேற்று வீட்டின் முன்பாகக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பிஸ்கட்டுகளைக் கொடுத்துவிட்டு, சமைப்பதற்காக மௌனிகா வீட்டிற்குள் சென்றுள்ளார். அந்தச் சமயத்தில் பிஸ்கட்டைச் சாப்பிட்ட அந்தக் குழந்தை, எதிர்பாராதவிதமாக அது தொண்டையில் சிக்கியதால் மூச்சு விட முடியாமல் தவித்து, திடீரென மயங்கி விழுந்துள்ளது.
குழந்தை மயங்கிக் கிடப்பதைக் கண்டு பதறிப்போன குடும்பத்தினர், உடனடியாகக் குழந்தையை மீட்டு அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அது மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். பெற்ற தாயின் ஒரு சிறிய கவனக்குறைவால் ஒரு வயதுக் குழந்தை துடிதுடித்துப் பலியான இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தால், அந்தக் குடும்பமே நிலைகுலைந்து போயுள்ளதுடன், ஒட்டுமொத்தக் கிராமமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
