“இது என்ன கொடூரம்..! மருமகனுடன் தாய்க்கு கள்ளத்தொடர்பு..” கர்ப்பிணி மகளைக் காட்டுக்கு கடத்திச் சென்று கருப்பையைக் கிழித்து பெற்றோர் செய்த கொடூர காரியம்.. பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இது என்ன கொடூரம்..! மருமகனுடன் தாய்க்கு கள்ளத்தொடர்பு..” கர்ப்பிணி மகளைக் காட்டுக்கு கடத்திச் சென்று கருப்பையைக் கிழித்து பெற்றோர் செய்த கொடூர காரியம்.. பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

அமெரிக்காவில் கர்ப்பிணியான 22 வயது மகள் ரெபேக்கா பார்க்கை அவரது பெற்றோர் கார்ட்னி பார்த்தலோமியோ மற்றும் பிராட்லி பார்த்தலோமியோ ஆகிய இருவருமே திட்டமிட்டுத் தந்திரமாக வீட்டிற்கு வரவழைத்துக் காட்டுக்குள் வைத்து கொடூரக் கொலை செய்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. மகளின் வருங்காலக் கணவரான ரிச்சர்ட் ஃபார்லருடன் முன்னரே பாலியல் உறவு வைத்திருந்த தாய் கார்ட்னிக்கு, மீண்டும் ஒரு குழந்தை பெற்றெடுக்க ஆசை இருந்துள்ளது. ஆனால் தந்தை பிராட்லி ஒரு பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றவாளி என்பதால் அவர்களால் குழந்தையைத் தத்தெடுக்கவும் முடியாமல் போயுள்ளது. இதனால், பரம்பரைச் சொத்து தருவதாக ஆசை வார்த்தை கூறி ரெபேக்காவைத் தன் வீட்டிற்கு வரவழைத்த பெற்றோர், பிரசவத் தேதி நெருங்கிய நிலையில் அவரைத் தங்களது காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

காட்டுப்பகுதியில் வைத்து மகள் உயிருடன் துடித்துக்கொண்டிருக்கும் போதே, தந்தை பிராட்லி அவரது கழுத்தில் கத்தியை வைக்க, தாய் கார்ட்னி அறுவைச் சிகிச்சை கத்தியால் மகளின் கருப்பையைக் கிழித்துப் பிறக்காத ஆண் குழந்தையை வெளியே எடுத்துள்ளார். ஆனால் அந்தப் பிஞ்சு உயிர் பிழைக்காததால் அதனைக் குப்பைத் தொட்டியில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். பிரசவத் தேதி கடந்த நிலையில் காட்டில் கண்டெடுக்கப்பட்ட மகளின் உடலில் இருந்து குழந்தையை எடுத்தது மற்றும் மகளுக்குச் சொந்தமான குழந்தைக்குத் தனது கணவரே தந்தை என்ற பல அதிரவைக்கும் உண்மைகள் விசாரணையில் வெளிவந்துள்ளன. தற்போது கொடூரக் கொலை, சித்திரவதை, கருச்சிதைவு உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பெற்றோர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 9-ஆம் தேதி தொடரவுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in