LATEST NEWS
அடக் கடவுளே.. செத்துட்டாருனு நினைச்சு அடக்கம் பண்ணிய குடும்பம்… மறுநாள் காலையில உயிருடன் வந்த முதியவர்.. அலறி அடித்து ஓடிய சொந்தங்கள்..! கடைசியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள நியூ மாடர்ன் ரயில்வே காலனியைச் சேர்ந்த 72 வயதான மன்ஷாலால் என்பவர், வெள்ளிக்கிழமை பீலிபித்தில் உள்ள தன் நண்பரைப் பார்க்கச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார். அதே நாளில், ஷஹீத் கேட் ரயில்வே கிராசிங் அருகே ரயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த மன்ஷாலாலின் மகனும் குடும்பத்தினரும், இறந்து கிடந்த உடலின் தோற்றம் மற்றும் சாயலை வைத்து அது மன்ஷாலால் தான் என தவறாக நினைத்து அடையாளம் காட்டினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு, வெள்ளிக்கிழமை மாலையே உடலைப் பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்குகளையும் செய்து அடக்கம் பண்ணினர். குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி இருந்த நிலையில், உறவினர்களும் அண்டை வீட்டாரும் அவர்களுக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
ஆனால், மறுநாள் சனிக்கிழமை அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு அதிசயம் நடந்ததுஉத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள நியூ மாடர்ன் ரயில்வே காலனியைச் சேர்ந்த 72 வயதான மன்ஷாலால் என்பவர், வெள்ளிக்கிழமை பீலிபித்தில் உள்ள தன் நண்பரைப் பார்க்கச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார். அதே நாளில், ஷஹீத் கேட் ரயில்வே கிராசிங் அருகே ரயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த மன்ஷாலாலின் மகனும் குடும்பத்தினரும், இறந்து கிடந்த உடலின் தோற்றம் மற்றும் சாயலை வைத்து அது மன்ஷாலால் தான் என தவறாக நினைத்து அடையாளம் காட்டினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு, வெள்ளிக்கிழமை மாலையே உடலைப் பெற்றுக்கொண்டு இறுதிச்சடங்குகளையும் செய்து அடக்கம் பண்ணினர். குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கி இருந்த நிலையில், உறவினர்களும் அண்டை வீட்டாரும் அவர்களுக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
ஆனால், மறுநாள் சனிக்கிழமை அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு அதிசயம் நடந்தது. இறந்துவிட்டார் என்று நினைத்து இறுதிச்சடங்கு செய்யப்பட்ட அதே மன்ஷாலால், திடீரென தனது வீட்டின் வாசலில் உயிருடன் வந்து நின்றார். அவரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பின்னர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், மன்ஷாலால் உயிருடன் இருக்கும்போது நேற்று அடக்கம் செய்யப்பட்டது யார் என்ற கேள்வி எழுந்தது. உடனடியாக அவர் பேரியர்-1 காவல் சௌக்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே காவல்துறை நடத்திய விசாரணையில் உண்மையான அதிர்ச்சி வெளிப்பட்டது. டிஃபென்ஸ் காலனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட்டான சந்திரிகா சிங் (72) என்பவரும் வெள்ளிக்கிழமை காலை நடைப்பயிற்சி சென்றவர் வீடு திரும்பவில்லை என்றும், அவரது குடும்பத்தினர் அவரைத் தேடி வந்ததும் தெரியவந்தது.
இசாத் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் சந்திர கெளதம் அளித்த விளக்கத்தின்படி, வெள்ளிக்கிழமை ரயில் விபத்தில் உயிரிழந்தவர் மன்ஷாலால் அல்ல; மாறாக சந்திரிகா சிங் ஆவார். மன்ஷாலால் மற்றும் சந்திரிகா சிங் ஆகிய இருவருக்குமே 72 வயது என்பதோடு, இருவரின் உடல் தோற்றமும் முகச் சாயலும் ஒரே மாதிரி இருந்த காரணத்தினாலேயே மன்ஷாலாலின் மகன் கேசவ் அந்த உடலைத் தன் தந்தை என தவறாக அடையாளம் கண்டுள்ளார். ஒருபுறம் மன்ஷாலால் தனது நண்பரின் வீட்டில் தங்கியிருக்க, மறுபுறம் சந்திரிகா சிங் விபத்தில் சிக்கியதால் இந்த தவறான அடையாளம் காணல் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, சந்திரிகா சிங்கின் குடும்பத்தினருக்கு காவல்துறை உண்மையை விளக்கி நிலைமையை தெளிவுபடுத்தியது.. இறந்துவிட்டார் என்று நினைத்து இறுதிச்சடங்கு செய்யப்பட்ட அதே மன்ஷாலால், திடீரென தனது வீட்டின் வாசலில் உயிருடன் வந்து நின்றார். அவரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பின்னர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், மன்ஷாலால் உயிருடன் இருக்கும்போது நேற்று அடக்கம் செய்யப்பட்டது யார் என்ற கேள்வி எழுந்தது. உடனடியாக அவர் பேரியர்-1 காவல் சௌக்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே காவல்துறை நடத்திய விசாரணையில் உண்மையான அதிர்ச்சி வெளிப்பட்டது. டிஃபென்ஸ் காலனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட்டான சந்திரிகா சிங் (72) என்பவரும் வெள்ளிக்கிழமை காலை நடைப்பயிற்சி சென்றவர் வீடு திரும்பவில்லை என்றும், அவரது குடும்பத்தினர் அவரைத் தேடி வந்ததும் தெரியவந்தது.
இசாத் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் சந்திர கெளதம் அளித்த விளக்கத்தின்படி, வெள்ளிக்கிழமை ரயில் விபத்தில் உயிரிழந்தவர் மன்ஷாலால் அல்ல; மாறாக சந்திரிகா சிங் ஆவார். மன்ஷாலால் மற்றும் சந்திரிகா சிங் ஆகிய இருவருக்குமே 72 வயது என்பதோடு, இருவரின் உடல் தோற்றமும் முகச் சாயலும் ஒரே மாதிரி இருந்த காரணத்தினாலேயே மன்ஷாலாலின் மகன் கேசவ் அந்த உடலைத் தன் தந்தை என தவறாக அடையாளம் கண்டுள்ளார். ஒருபுறம் மன்ஷாலால் தனது நண்பரின் வீட்டில் தங்கியிருக்க, மறுபுறம் சந்திரிகா சிங் விபத்தில் சிக்கியதால் இந்த தவறான அடையாளம் காணல் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, சந்திரிகா சிங்கின் குடும்பத்தினருக்கு காவல்துறை உண்மையை விளக்கி நிலைமையை தெளிவுபடுத்தியது.
