CRIME
“என்னை காதலிக்கமாட்டியா ..?” மறுத்த காதலியின் தொண்டையை அறுத்த காதலன்… அடுத்தடுத்து நடந்த பயங்கரம்.. ஆந்திராவை உலுக்கிய சம்பவம்..!!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள நியூ ராஜராஜேஸ்வரி பேட்டையில், காதலை நிராகரித்ததால் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, இளம்பெண்ணின் தொண்டையை வாலிபர் ஒருவர் அரிவாளால் அறுத்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீத சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மகாலட்சுமி மற்றும் தாக்குதல் நடத்திய சின்னாராவ் ஆகிய இருவரும் கடந்த சில காலமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், சமீபத்தில் எழுந்த சந்தேகத்தின் காரணமாக இருவருக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறின் போது, சின்னாராவ் ஆயுதத்தால் மகாலட்சுமியைத் தாக்கியுள்ளார். இதில் அவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. உடனே அருகில் இருந்தவர்கள் மகாலட்சுமியை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாலட்சுமியைத் தாக்கிய சில நிமிடங்களிலேயே, சின்னாராவ் அந்த வீட்டின் மொட்டை மாடிக்கு ஓடிச் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் கீழே குதித்ததில் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து சத்யநாராயணபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
