9 மாசத்துல 5,000 கால்ஸ்… 23 வயசு மூத்த கோச்சிங் வாத்தியார்.. போலீஸ் வேலை கிடைச்சதும் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பெண் கான்ஸ்டபிள் தற்கொலை..!! – cinefeeds
Connect with us

CRIME

9 மாசத்துல 5,000 கால்ஸ்… 23 வயசு மூத்த கோச்சிங் வாத்தியார்.. போலீஸ் வேலை கிடைச்சதும் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பெண் கான்ஸ்டபிள் தற்கொலை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பயிற்சி பெண் காவலர் பிரதீக்ஷா (22) தற்கொலை செய்துகொண்ட வழக்கில், தன்னைவிட 23 வயது மூத்தவரான கோச்சிங் சென்டர் ஆசிரியர் விக்ராந்த் சிங் சாந்தெல் என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு முதல் விக்ராந்தின் பயிற்சி மையத்தில் பிரதீக்ஷா படித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நெருக்கமான நட்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் பிரதீக்ஷாவுக்கு உத்திரப் பிரதேச காவல்துறையில் கான்ஸ்டபிள் வேலை கிடைத்துள்ளது. வேலை கிடைத்த பிறகு, அவர் விக்ராந்துடன் பேசுவதைக் குறைத்துக்கொண்டு தூரத்தை மெல்ல மெல்ல அதிகரித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் விக்ராந்த், தன்னை ஏன் தவிர்க்கிறாய் எனக் கேட்டு பிரதீக்ஷாவைத் தொடர்ந்து மனரீதியாகக் கடுமையாகத் துன்புறுத்தி வந்துள்ளார். இந்தத் தொடர் தொல்லைகளால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகவே பிரதீக்ஷா தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த போலீசார் பிரதீக்ஷாவின் மொபைல் போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. அவர்கள் இருவரும் கடந்த 9 மாதங்களில் மட்டும் சுமார் 5,000 முறை போனில் பேசியுள்ளனர். அதில் மிக நீண்ட அழைப்பாக ஒருமுறை தொடர்ந்து 3 மணி நேரம் பேசியதும் தெரியவந்துள்ளது. மேலும், பிரதீக்ஷா தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட விக்ராந்த் அவரிடம் மூன்று முறை போனில் பேசியுள்ளார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டியதாக ஆசிரியர் விக்ராந்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in