CRIME
“அவனும் அவன் தம்பியும் தான் காரணம்…” இன்ஸ்டாகிராம் காதல், பெற்றோருக்கு மிரட்டல்… தாய்க்கு உருக்கமான கடிதம் எழுதிவிட்டு மாணவி எடுத்த கொடூர முடிவு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில் உள்ள முகமதாபாத் பகுதியில் ஷாலினி குப்தா என்ற பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் காதலன் அனஸ் மற்றும் அவனது சகோதரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பள்ளி மாணவியான ஷாலினிக்கும், அதே பள்ளியில் படித்து வந்த அனஸ் என்பவனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. சில காலத்திற்குப் பிறகு, அனஸ் அவரைத் தனியாகச் சந்திக்க வருமாறு வற்புறுத்தியுள்ளார்; அதற்கு மாணவி மறுத்ததால் அனஸ் மற்றும் அவனது சகோதரன் சேர்ந்து மாணவியின் வீட்டிற்கே சென்று அவரது குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். இந்த விவகாரம் பள்ளித் தலைமை ஆசிரியர் வரை சென்று, மாணவியின் தாயார் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டதால் ஷாலினி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதனால் வேதனையடைந்த மாணவி, தனது தாயின் பெயருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்தத் தற்கொலைக் கடிதத்தில், அனஸ் மற்றும் அவனது சகோதரன் கொடுத்த மிரட்டல்களே தனது முடிவுக்குக் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, குற்றம் சாட்டப்பட்ட அனஸ் மற்றும் அவனது சகோதரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
