“உங்க ஆடையை மாத்தணும்..” தனி அறையில் சிக்கிய பெண்.. செவிலியர் செய்த கொடூர காரியம்.. மருத்துவமனை நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“உங்க ஆடையை மாத்தணும்..” தனி அறையில் சிக்கிய பெண்.. செவிலியர் செய்த கொடூர காரியம்.. மருத்துவமனை நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

இங்கிலாந்தில் உள்ள ராயல் போர்ன்மவுத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 30 வயதுப் பெண் நோயாளிக்கு ஆடைகளை மாற்ற உதவுவதாகக் கூறி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆண் செவிலியர் எர்னஸ்ட் பால் குரூஸ் (38) என்பவரை நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. கடந்த 2023 ஜூலை 30 அன்று அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், பின்னர் ஒரு தனி அறைக்கு மாற்றப்பட்டார். அந்தச் சமயத்தில் அங்கு வந்த செவிலியர் எர்னஸ்ட் குரூஸ், பெண்ணின் உடைகளை மாற்ற வேண்டும் என்று கூறி அவரது ஆடைகளைக் கழற்ற உதவியதோடு, அவரைத் தவறான முறையில் தொட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் மறுநாள் காலையில் நடந்த கொடுமைகள் அனைத்தையும் அங்கிருந்த மற்றொரு பெண் செவிலியரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, டோர்செட் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போர்ன்மவுத் கிரவுன் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் எர்னஸ்ட் பால் குரூஸ் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டன. இதனை அடுத்து, 38 வயதான அவர் மீது பாலியல் தீங்கு தடுப்பு உத்தரவு மற்றும் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, அவரது பெயர் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in