திகிலூட்டும் சம்பவம்… மரணப்படுக்கையில் இருந்த நோயாளி சொன்ன அந்த 6 வார்த்தைகள்… உடனே வேலையைவிட்ட நர்ஸ்..! அப்படி அங்க என்ன நடந்தது தெரியுமா..?! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திகிலூட்டும் சம்பவம்… மரணப்படுக்கையில் இருந்த நோயாளி சொன்ன அந்த 6 வார்த்தைகள்… உடனே வேலையைவிட்ட நர்ஸ்..! அப்படி அங்க என்ன நடந்தது தெரியுமா..?!

Published

on

மருத்துவமனைகள் வெளியில் இருந்து பார்ப்பதற்கு அமைதியாகத் தோன்றினாலும், உள்ளே நடக்கும் சில உண்மைகள் நம்மை மிரளச் செய்யும் வகையில் இருக்கும். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு திகிலூட்டும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மரணமடைவதற்கு சற்று முன்பு நோயாளி ஒருவர் கூறிய வார்த்தைகளைக் கேட்ட நர்ஸ், உடனடியாக தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

டிக்டாக் தளத்தில் மாரிசா என்ற பயனர் பகிர்ந்த தகவலின்படி, நள்ளிரவு இரண்டரை மணியளவில் மருத்துவமனை அறை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளி ஒருவர் திடீரென காலியாக இருந்த நாற்காலியை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். என்னவென்று நர்ஸ் கேட்டதற்கு, “அந்த நாற்காலியைத் திருப்ப முடியுமா? அதன் மேல் உட்கார்ந்திருக்கும் சிறிய குழந்தை என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டு சிரிக்கிறது” என்று பயத்துடன் கூறினார். நர்ஸ் அதனை நோயாளியின் பிரம்மை என்று நினைத்து நாற்காலியைச் சுவரi நோக்கித் திருப்பிவிட்டுச் சென்றார். சுமார் 20 நிமிடங்கள் கழித்து அவசர அழைப்பு மணி அடித்ததும் ஓடிச்சென்ற நர்ஸிடம், அந்தப் பெண் அழுதுகொண்டே, “நீ அந்த நாற்காலியைத் திருப்பியிருக்கக் கூடாது, ஏனென்றால் இப்போது அவன் உனக்குப் பின்னால் நிற்கிறான்” என்று கூறினார்.

Advertisement

இதன் பிறகு அதிகாலை 3:17 மணியளவில் அந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். அறையைச் சுத்தம் செய்யும் போது அவரது தலையணைக்கு அடியில் ஒரு துண்டுச் சீட்டு கிடைத்தது; அதில் “அது சிறிய குழந்தை அல்ல, உனது முகத்தைப் பார்ப்பதற்காக அது குனிந்து கொள்கிறது” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் மனதளவில் உடைந்த அந்த நர்ஸ், தனது வேலையை நிரந்தரமாக விட்டுவிட முடிவு செய்தார். இறுதியாக அவர் மருத்துவமனையைவிட்டு வெளியேறும் போது, காவலாளி அவரிடம், “இந்தச் சிறிய குழந்தை எதற்காக எப்போதும் உன்னைப் பின் தொடர்ந்துகொண்டே இருக்கிறது?” என்று கேட்டது அந்த நர்ஸை மேலும் பீதியில் ஆழ்த்தியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in