மனைவியைக் கொன்று ஃப்ரீசரில் அடைத்துவிட்டு… 3 குழந்தைகளுடன் அதே வீட்டில்.. டேட்டிங் செயலியில் உல்லாசமாக இருந் கணவன்… திடுக்கிட வைக்கும் சமபவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

மனைவியைக் கொன்று ஃப்ரீசரில் அடைத்துவிட்டு… 3 குழந்தைகளுடன் அதே வீட்டில்.. டேட்டிங் செயலியில் உல்லாசமாக இருந் கணவன்… திடுக்கிட வைக்கும் சமபவம்..!!

Published

on

இங்கிலாந்தில் சுத்தியலால் தன் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவரது உடலை வீட்டு ஃப்ரீசருக்குள் மறைத்து வைத்ததோடு, அதே வீட்டில் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில், 46 வயதான டேவிட் பாராக்லோ என்ற நபருக்குக் குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத் தண்டனையுடன் கூடிய ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் டேவிட், தனது மனைவி கரோலானைக் கொலை செய்துவிட்டு உடலைக் கட்டி உறைவிப்பானுக்குள் மறைத்து வைத்துள்ளார். அதன்பின்னர், மனைவி உயிருடன் இருப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்த, அவரது போனிலிருந்தே உறவினர்களுக்குக் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். மேலும், மனைவி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருப்பதாகவும் நாடகமாடிய டேவிட், ஃப்ரீசர் இருந்த அறைக்குள் குழந்தைகள் செல்லாதவாறு தடுத்து அதே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.

Advertisement

மனைவியைக் கொன்ற இரண்டு நாட்களிலேயே ‘டிண்டர்’ டேட்டிங் செயலியைப் பயன்படுத்திய டேவிட், கூட்டு வங்கிக் கணக்கிலிருந்து பணத்தையும் எடுத்து சொகுசாக வாழ்ந்துள்ளார். மார்ச் 5 அன்று காவல் நிலையத்திற்குச் சென்று அவரே குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, போலீசார் ஃப்ரீசரிலிருந்து உடலைக் கைப்பற்றினர். ஆரம்பத்தில் தற்காப்பிற்காகக் கொலை செய்ததாகக் கூறி தப்பிக்க முயன்ற டேவிட்டின் பொய்கள் நீதிமன்ற விசாரணையில் முறியடிக்கப்பட்டு தற்போது அவருக்குத் தண்டனை கிடைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in