“49 வயசுல இன்னொரு கல்யாணமா..?” தாயை கொலை செய்வதற்காகவே.. வெளிநாட்டில் இருந்து வந்த மகன்… 2வது கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“49 வயசுல இன்னொரு கல்யாணமா..?” தாயை கொலை செய்வதற்காகவே.. வெளிநாட்டில் இருந்து வந்த மகன்… 2வது கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில், தனது தாயின் இரண்டாவது திருமணத்தால் அதிருப்தி அடைந்த 22 வயது மகன், வெளிநாட்டில் இருந்து வந்து தாயின் இரண்டாவது கணவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, நியூசிலாந்தில் இருந்து வந்த மகன் அவ்தீப் சிங் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த வாடகைக்கார் ஓட்டுநரான ராஜன்தீப் சிங் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட 25 வயதான நவ்ஜோத் சிங், கடந்த சனிக்கிழமையன்று தனது கார் சர்வீஸ் சென்டருக்கு வெளியே இருந்தபோது, காரில் வந்த இருவரால் கொடூரமாகச் சுடப்பட்டார். சிசிடிவி காட்சிகளின்படி, முகத்தை மூடியபடி வந்த அந்த நபர்கள் நவ்ஜோத்தை நோக்கி அடுத்தடுத்து பலமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர். படுகாயமடைந்த நவ்ஜோத் சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நவ்ஜோத் சிங் தனது முதல் மனைவி இறந்த பிறகு, 49 வயதான கமல் கவுர் என்ற விதவைப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. கமல் கவுரின் மகனான அவ்தீப் சிங், தந்தையின் இறப்புக்குப் பிறகு நியூசிலாந்தில் வசித்து வந்துள்ளார். தாயின் இந்த இரண்டாவது திருமணத்தை அவ்தீப் மற்றும் அவரது சகோதரர் கடுமையாக எதிர்த்ததோடு, நவ்ஜோத்தை ஏற்கனவே மிரட்டியும் வந்துள்ளனர்.

தாயின் கணவரைக் கொலை செய்வதற்காகவே கடந்த செப்டம்பர் 22 அன்று அவ்தீப் சிங் நியூசிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ளார். ஹோட்டல்களிலும், உறவினரான ராஜன்தீப் வீட்டிலும் தங்கி இந்தக் கொலைக்கான திட்டத்தைத் தீட்டியுள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் உடல் தோற்றத்தை வைத்து குற்றவாளிகளைப் போலீசார் அடையாளம் கண்டு கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கொலைக்குப் பயன்படுத்திய கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in