15 வருட திருமண வாழ்க்கை… ஒரு நிமிட ஆத்திரத்தில் கணவன் செய்த விபரீதம்.. ரத்தவெள்ளத்தில் சரிந்த மனைவி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

15 வருட திருமண வாழ்க்கை… ஒரு நிமிட ஆத்திரத்தில் கணவன் செய்த விபரீதம்.. ரத்தவெள்ளத்தில் சரிந்த மனைவி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

ஹைதராபாத் பஹாடிஷரீஃப் அருகே உள்ள நியூ பாபநகர் பகுதியில் 30 வயது பெண் தனது கணவனால் கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அஜ்மீரா மற்றும் முகமது முஸ்தபா தம்பதியினருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஹைதராபாத்தில் வசித்து வந்த இவர்களுக்குள் நேற்று மதியம் திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகமது முஸ்தபா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அஜ்மீராவை சரமாரியாகக் குத்திக் கொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு குற்றவாளியான முகமது முஸ்தபா அவ்விடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பலாபூர் மற்றும் பஹாடிஷரீஃப் எல்லைக்குட்பட்ட காவல்துறையினர், அஜ்மீராவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய கணவனைப் பிடிப்பதற்காகத் தனிப்படைகளை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in