CRIME
மனுஷியாடா இவ.. 6 லட்சம் கொடுத்து மாமனார முடிச்சுவிட்டுட்டு.. ஒன்னுமே தெரியாத மாதிரி பார்ட்டில கூத்தடிச்ச மருமகள்.. கான்பூரை உலுக்கிய பகீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மருந்து வியாபாரி வினீத் மிணோச்சா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 36 வயதான மருமகள் ஷாலு தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மாமனார் வீட்டில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதே இரவில், ஷாலு ஒரு விருந்தில் தனது கணவருடன் நடனமாடிக் கொண்டிருப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது கொலை வழக்கின் விசாரணையில் மிக முக்கியமான ஆதாரமாக உருவெடுத்துள்ளது.
வீட்டில் வினீத் மிணோச்சா கொலை செய்யப்பட்டு கொண்டிருந்த சமயத்தில், ஷாலு ஒரு பார்ட்டியில் ‘தும் தோ தோகேபாஸ் ஹோ’ என்ற பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி கொண்டாடியுள்ளார். அதே நேரத்தில், கொலையாளிகளுடன் அவர் தொடர்ந்து தொலைபேசி வாயிலாகத் தொடர்பில் இருந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை சம்பவத்திற்காக கொலையாளிகளுக்கு ரூ.6 லட்சம் பேரம் பேசப்பட்டு, வினீத் மிணோச்சா 26 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மாமனார் கொடூரமாகக் கொல்லப்பட்ட தருணத்தில், அதைப்பற்றி எந்தக் கவலையுமின்றி மருமகள் விருந்தில் நடனமாடிய காட்சி இந்த வழக்கின் திடுக்கிடும் திருப்பமாக அமைந்துள்ளது.
