“அய்யோ கொடுமையே..! இவங்களுக்கு மனசாட்சியே இல்லையா..?” உணவை தாமதமாக தந்ததால் ஜோமேட்டோ ஊழியரை கொடூரமாக தாக்கிய தம்பதி..! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ கொடுமையே..! இவங்களுக்கு மனசாட்சியே இல்லையா..?” உணவை தாமதமாக தந்ததால் ஜோமேட்டோ ஊழியரை கொடூரமாக தாக்கிய தம்பதி..! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

ஹைதராபாத்தின் செகந்திராபாத் பகுதியில் உள்ள வாசவி நகரில் உணவை தாமதமாக விநியோகித்ததற்காக ஜோமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவரை தம்பதியினர் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட டெலிவரி ஊழியர் ஆஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார். முகவரியில் காட்டப்பட்ட தவறான இருப்பிடம் காரணமாகவே உணவு கொண்டு வர தாமதமானதாக அவர் தம்பதியினரிடம் விளக்கியுள்ளார். இருப்பினும், அதனை ஏற்றுக்கொள்ளாத தம்பதியினர் அவருடன் தகராறில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

Advertisement

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஊழியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். போக்குவரத்து நெரிசல் மற்றும் தவறான முகவரி போன்ற தங்களின் கட்டுப்பாட்டை மீறிய காரணங்களால் டெலிவரி ஊழியர்கள் சந்திக்கும் ஆபத்துகளை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in