ஐயோ..! அந்த பச்சப்புள்ள என்ன பாவம் பண்ணுச்சு..? 4 வயது குழந்தை கழுத்தறுத்து கொலை… சாக்கு மூட்டையில் கட்டி குவாரியில் வீசிய கொடூரம்.. கதறித்துடிக்கும் பெற்றோர்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ..! அந்த பச்சப்புள்ள என்ன பாவம் பண்ணுச்சு..? 4 வயது குழந்தை கழுத்தறுத்து கொலை… சாக்கு மூட்டையில் கட்டி குவாரியில் வீசிய கொடூரம்.. கதறித்துடிக்கும் பெற்றோர்..!!

Published

on

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மோகன் என்ற 4 வயதுச் சிறுவன் திடீரென மாயமானான். சிறுவனைக் காணாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் நடத்திய தீவிர தேடுதலின் போது, அப்பகுதியில் உள்ள குவாரி பள்ளத்தில் சந்தேகத்திற்கு இடமாகச் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சாக்கு மூட்டையைப் பிரித்துச் சோதனையிட்டபோது, காணாமல்போன சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

Advertisement

இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த முன்விரோதம் காரணமாகவே, உறவினரான 18 வயது இளைஞர் மணி என்பவர் சிறுவனைக் கடத்திக் கொலை செய்து குவாரியில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரைப் பிடித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in