சாமி கும்பிட போன இடத்துல இப்படியா..? திருத்தணி முருகன் கோயிலில் பரபரப்பு… கோபுர சிலை உடைந்து விழுந்து 4 பக்தர்கள் படுகாயம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சாமி கும்பிட போன இடத்துல இப்படியா..? திருத்தணி முருகன் கோயிலில் பரபரப்பு… கோபுர சிலை உடைந்து விழுந்து 4 பக்தர்கள் படுகாயம்..!!

Published

on

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில், சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தபோது கோபுரத்தில் இருந்த சுதைச் சிலை உடைந்ததில் கற்கள் பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கோபுரத்தின் மீது இருந்த குரங்கு ஒன்று யாழி சிலையை ஆட்டியதால் சிலை உடைந்ததாகவும், அதன் பாகங்கள் கீழே நின்றிருந்த பக்தர்கள் மீது விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த எதிர்பாராத விபத்தில் படுகாயமடைந்த 4 பக்தர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பக்தர்களிடையே பலத்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in