“நகைகளை விற்று உல்லாசம்”… கணவன், மனைவி ரெண்டு பேருக்கும் கள்ளத்தொடர்பு… வசமாக சிக்கிய தவெக மாவட்ட செயலாளர்..? நடந்தது என்ன..? – cinefeeds
Connect with us

CRIME

“நகைகளை விற்று உல்லாசம்”… கணவன், மனைவி ரெண்டு பேருக்கும் கள்ளத்தொடர்பு… வசமாக சிக்கிய தவெக மாவட்ட செயலாளர்..? நடந்தது என்ன..?

Published

on

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் தீபா தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு, தற்பொழுது பரஸ்பர குற்றச்சாட்டுகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவலகம் வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ல் திருமணமான இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், இருவருக்குமே வெளியில் தனித்தனியாகத் தொடர்புகள் இருப்பதாக எழுந்த கருத்து வேறுபாட்டால், கடந்த நான்கு வருடங்களாகத் தீபா தன் குழந்தையுடன் திருத்தணியில் உள்ள தாய் வீட்டில் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், தனது மனைவி தீபா திருமணமான தமிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் டில்லிபாபுவுடன் நெருக்கமாகப் பல்வேறு இடங்களுக்குச் சுற்றி வருவதாகக் கணவர் பிரதாப் குற்றம் சாட்டியுள்ளார். டில்லிபாபுவும் தீபாவும் திருப்பதி கோவிலுக்குச் சென்றிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற பிரதாப், அவர்கள் இருவருடனும் தகராறில் ஈடுபட்டுத் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து தன்னை கொலை செய்ய மிரட்டுவதாகவும், தனது குழந்தையை மீட்டுத் தரக் கோரியும் பிரதாப் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

Advertisement

பிரதாப்பின் புகாரைத் தொடர்ந்து எஸ்பி அலுவலகம் வந்த மனைவி தீபா, தன் கணவர் சுமத்திய குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். தவெக மாவட்ட செயலாளர் டில்லிபாபுவிற்கும் தனக்கும் எந்தவித கள்ளத்தொடர்பும் இல்லை என்றும், அவர் தங்களது குடும்ப நண்பர் மட்டுமே என்றும் தீபா விளக்கம் அளித்துள்ளார். மேலும், தனக்கு தளபதி விஜயைப் பிடிக்கும் என்பதால் அவருடன் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், தான் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசுவதைக் கணவர் தவறாகச் சித்தரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கணவர் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த தீபா, பிரதாப் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாலேயே அவரை விட்டுப் பிரிந்ததாகவும், திருமணத்தின் போது போடப்பட்ட தனது 60 சவரன் நகைகளை விற்று அவர் பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். தற்பொழுது அவதூறு பரப்புவதை நிறுத்த 50 சவரன் நகை தருமாறு கணவர் பிரதாப் பேரம் பேசுவதாகவும், இல்லையெனில் தன்னையும் குழந்தையையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறி, தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி தீபாவும் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in