CRIME
“ஓரினச்சேர்க்கைக்கு அழைப்பு” ஆசை ஆசையாக வந்த பள்ளி ஆசிரியர்… அடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி… கோவையில் பயங்கரம்…!!!
கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து ஓரினச்சேர்க்கைக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளது. பணம் பறிக்கும் நோக்கோடு திட்டமிட்டுச் செயல்பட்ட ஒரு கும்பல், அந்த ஆசிரியரை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்துத் தங்களின் வலையில் வீழ்த்தியுள்ளது.
ஆசிரியர் அங்கு சென்றவுடன், அங்கிருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டு அவரிடம் ரூ.99 ஆயிரத்தைப் பறித்துக்கொண்டு மிரட்டியுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியர், தன்னிடம் இருந்த பணத்தை இழந்துவிட்டு, அந்தக் கும்பலின் மிரட்டலுக்குப் பயந்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்துள்ளார்.
ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில், வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியரை மிரட்டிப் பணம் பறித்துவிட்டுத் தற்போது தலைமறைவாக இருக்கும் 5 பேர் கொண்ட அந்தக் கும்பலை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்
