CRIME
அடக்கடவுளே.. வீரமரணமடைந்த தியாகியின் உடல்.. ஏற்றி வந்த ஆம்புலன்ஸே எமனாக மாறிய கொடூரம்.. 3 பேருக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில், தியாகி ஒருவரின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் வீரமரணமடைந்த சுபேதார் மேஜர் சத்யவான் என்பவரின் உடலைத் தங்களது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்கள் ஏற்றிச் சென்றுள்ளனர். அப்போது, சுல்தான்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கொடூர விபத்தில் ஆம்புலன்ஸில் பயணித்த வீரமரணமடைந்த தியாகியின் மகன் கௌரவ் சிங், சகோதரர் ராஜன் சவுத்ரி, மருமகன் ராம் சாமுஜ் சிங் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜஸ்பால் ஆகிய நான்கு பேருமே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். நாட்டின் எல்லையைக் காத்து தியாகம் செய்த வீரரின் மரண சோகத்தில் இருந்த குடும்பத்தினருக்கு, அவரது உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸே விபத்தில் சிக்கி மேலும் மூன்று சொந்தங்கள் பலியான இச்சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
