CRIME
அடச்சீ…! “வீட்டில் சொன்னா கொன்னுடுவேன்..” 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவுப் பணியாளர்.. கோவில் வளாகத்தில் அரங்கேறிய கொடூரம்..!!
உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கோஷாலா சாலை பகுதியில் அமைந்துள்ள ஒரு கோவில் வளாகத்தின் அறையில், 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 22 வயதான துப்புரவுப் பணியாளர் சதீந்திர குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியில் யாருடமாவது கூறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் “வீட்டில் சொன்னால் கொன்றுவிடுவேன்” என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சிறுமியை மிரட்டியதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் தகவலின்படி, இந்தச் சம்பவம் செப்டம்பர் 29 அன்று நடந்துள்ளது. சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். புகாரில், சிறுவன் ஒருவன் சிறுமியை கோவில் வளாகத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்குள்ள ஒரு அறையில் சதீந்திர குமார் அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில், சிறுமியை அழைத்துச் சென்ற அந்தச் சிறுவனையும் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு வழக்கு விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 29 அன்று, கோவில் அறையில் சதீந்திர குமார் சிறுமியுடன் ஆட்சேபனைக்குரிய நிலையில் இருந்ததைக் கண்ட மூன்று நபர்கள், சதீந்திர குமாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சதீந்திர குமாரைத் தாக்கிய குற்றத்திற்காக அந்த மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது காவல்துறையினர் இரு வழக்குகளையும் இணைத்து, சிறுமியின் வாக்குமூலம் மற்றும் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் மேல்நடவடிக்கைக்கான தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
