LATEST NEWS
உச்சக்கட்ட பரபரப்பு.. ரூ.50 கோடி கோயில் நில மோசடி… சிக்கிய திமுக நிர்வாகி… முன்ஜாமீன் கேட்டும் தூக்கி உள்ளே வைத்த போலிஸ்..!!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில், திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடாக அபகரித்த குற்றச்சாட்டின் கீழ், ராம்குமார் உட்பட மொத்தம் 6 பேர் மீது சமீபத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
போலீசாரின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக, ராம்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில்தான், முன்ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும் சூழலிலேயே, காவல்துறையினர் அதிரடியாக ராம்குமாரைக் கைது செய்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
