CRIME
“நீ எனக்கு வேண்டாம்..” அந்தரங்க புகைப்படங்களை கணவருக்கு அனுப்பிய முன்னாள் காதலன்.. குடும்பத்தினர் போட்ட ஸ்கெட்ச்.. வைரல் வீடியோ..!!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், மற்றொருவரைத் திருமணம் செய்துகொண்ட ஆத்திரத்தில் இளம்பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பரப்பிய முன்னாள் காதலனை, அப்பெண்ணின் குடும்பத்தினர் வணிக வளாகம் ஒன்றில் வைத்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் காதலர், அப்பெண்ணுக்குத் திருமணம் ஆனதை அறிந்தது முதல் கடந்த ஒரு மாதமாகத் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும், இல்லையென்றால் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். அந்த இளம்பெண் இதற்கு உடன்படாததால், ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் அந்தப் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், அப்பெண்ணின் கணவருக்கும் அனுப்பியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவன், “நீ எனக்கு வேண்டாம்” என்று கூறி அந்தப் பெண்ணைக் கைவிட்டுச் சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், அவனுக்குப் பாடம் புகட்ட ஒரு திட்டத்தைத் தீட்டினர். அதன்படி அந்த இளம்பெண்ணைக் கொண்டு “நம்மை நேரில் சந்திக்கலாம்” என முன்னாள் காதலனை விஜயவாடாவில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வரவழைத்தனர். அவன் அங்கு வந்தவுடன், மறைந்திருந்த பெண்ணின் குடும்பத்தினர் அவனைச் சூழ்ந்து கொண்டு, அங்கிருந்த பொதுமக்களின் தடுத்தலையும் மீறி இரக்கமில்லாமல் மிகக் கொடூரமாகத் தாக்கினர். பின்னர், படுகாயமடைந்த அந்தச் சமூக விரோதியை அப்படியே இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
