CRIME
. ஒரே ஒரு சிகரெட் கடை சந்திப்பு… காரில் நடந்த கொடூரம்..! தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்… 100 CCTV கேமராக்களால் உடைந்த மர்மம்..!!
நொய்டா செக்டார்-121 இல் வசித்து வந்த தொழிலதிபரும் புரோக்கருமான பிரசாந்த் சர்மா கொலை செய்யப்பட்ட வழக்கில் ஃபேஸ்-3 காவல் நிலைய போலீசார் நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். போலீசாரின் கூற்றுப்படி, பிரசாந்திற்கு சிகரெட் கடையில் வைத்துதான் அந்த நபர்களுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு, பிரசாந்த் அவர்களைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு பார்ட்டிக்காக அழைத்துச் சென்றுள்ளார். வழியில் மதுபானம் வாங்கப்பட்டு, காரில் பார்ட்டி நடந்துகொண்டிருந்தபோது ஏதோ ஒரு விஷயத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது அந்த நான்கு இளைஞர்களும் சேர்ந்து பிரசாந்தின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். கொலையாளிகள் பிரசாந்தின் காரை அலிகார் பகுதிக்கு எடுத்துச் சென்று ஒரு பாலத்தின் அடியில் நிறுத்திவிட்டு, பஸ்ஸில் நொய்டாவுக்குத் திரும்பியுள்ளனர்.
முன்னதாக, செப்டம்பர் 20 அன்று பிரசாந்த் சர்மாவின் மகள் ஃபேஸ்-3 காவல் நிலையத்தில் தந்தை காணாமல் போனதாகப் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர் சென்ற வழிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பிரசாந்த் சில இளைஞர்களுடன் இருப்பது தெரியவந்தது. செப்டம்பர் 16 இரவன்று பிரசாந்த் திகோனா பார்க் அருகில் சென்றபோது, பிட்டு என்ற நிதின் மற்றும் நிகம் தாக்குர் ஆகியோருடன் அறிமுகம் ஆகியுள்ளார். பின்னர் பிரசாந்த் அவர்கள் இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு கவுர் சிட்டி நோக்கிச் சென்றுள்ளார். வழியில் மது வாங்கி, அவர்களின் நண்பர்களான மோஹித் மற்றும் இர்பான் ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு, அனைவரும் சேர்ந்து காரில் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் பிரசாந்தைக் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர்.
கொலைக்கு பிறகு, பிரசாந்தின் உடலை பிஸ்ரக் காவல் எல்லைக்குட்பட்ட கழிவுநீர் கால்வாய் அருகில் வீசியுள்ளனர். செப்டம்பர் 17 அன்று அங்கு அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அவரிடம் அடையாளச் சான்றுகள் எதுவும் இல்லாததால், போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பின் அனாதை சடலமாகக் கருதி இறுதிச் சடங்குகளைச் செய்தனர். பின்னர், பிரசாந்தின் குடும்பத்தினர் அந்த உடலை அடையாளங் கண்டுகொண்டனர். இதன் மூலம் காணாமல் போன வழக்குக் கொலை வழக்காக மாற்றப்பட்டு, 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
