LATEST NEWS
“டீ வேணுமா… இல்ல துரோகம் வேணுமா..?” கடையில இருந்த போர்ட பார்த்து மிரண்டு போனா கஸ்டமர்ஸ்..! பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!!
காதலில் கிடைக்கும் துரோகம் ஒரு மனிதனை உடைத்துவிடும் என்பார்கள், ஆனால் உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியாவைச் சேர்ந்த ரிதேஷ் குமார் யாதவ் என்ற நபர் தனது அந்த வலியையே சொந்த அடையாளமாக மாற்றியுள்ளார். பான்ஸ்டீ-பிண்டாரா சாலையில் பிண்டாரா பெட்ரோல் பங்க் எதிரே அமைந்துள்ள இவரது டீக்கடையின் பெயர் ‘பெவஃபா சாய்வாலா’. வழிப்போக்கர்களை சுண்டி இழுக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த கடையின் பெயருடன் “நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள், டீயா? அல்லது துரோகமா?” என்ற டேக்லைனும் எழுதப்பட்டுள்ளது. இக்கடையை நடத்தி வரும் ரிதேஷ், காதலில் ஏமாற்றமடைந்த பிறகு தனது வாழ்க்கைப் பாதையை மாற்றி இந்த டீக்கடையைத் தொடங்கியுள்ளார். தனது பழைய காதல் கதையைப் பற்றி அதிகம் பேச விரும்பாத இவர், அதன்பின் உள்ள கதை மிகவும் சோகமானது என்றும் அதை விவரிப்பது எளிதல்ல என்றும் கூறுகிறார்.
ரிதேஷ் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை டீ தயாரிக்கிறார். இவரது கடையில் பிளாக் டீ, லெமன் டீ, மலாய் டீ மற்றும் பால் டீ என பல வகையான டீக்கள் கிடைக்கின்றன. இவர் பித்தளை பாத்திரத்தில் டீ தயாரித்து, அதை மண் குவளைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுதான் சிறப்பு. இக்கடையைப் பற்றி ரிதேஷின் நண்பர் கெளரவ் பாண்டே கூறுகையில், டீக்கடை தொடங்குவதற்கு முன்பு ரிதேஷ் டிரக் ஓட்டி வந்ததாகவும், அப்போது ஒருவரைக் காதலித்து அதில் ஏமாற்றம் அடைந்ததால் டிரக் ஓட்டுவதைக் கைவிட்டு ‘பெவஃபா சாய்வாலா’ என்ற பெயரில் இந்தத் தொழிலைத் தொடங்கியதாகவும் தெரிவிக்கிறார். லாக்டவுன் காலத்திலிருந்தே இங்கு வாடிக்கையாளர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது இந்த டீக்கடை டீயின் சுவைக்காக மட்டுமன்றி, அதன் வித்தியாசமான பெயர் மற்றும் பின்னணி கதைக்காகவும் மிகவும் பிரபலமடைந்துள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி அரசு அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் கூட இங்கு வந்து டீ குடித்து மகிழ்கின்றனர். பித்தளை பாத்திரத்தில் காய்ச்சி மண் குவளையில் தரப்படும் டீயின் சுவை தனித்துவமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஒருகாலத்தில் காதலில் கிடைத்த வலியால் தொடங்கப்பட்ட இந்த டீக்கடையில், இன்று வாடிக்கையாளர்கள் புன்னகையுடன் “தம்பி, டீ கிடைக்குமா அல்லது துரோகம் கிடைக்குமா?” என்று கேட்டு ரசித்து டீ குடித்துச் செல்கின்றனர்.
