CINEMA
“யாருடா நீங்களாம்… இப்படியெல்லாம் கூட யோசிப்பாங்களா..?! சினிமா ரேஞ்சுக்கு ஐடியா பண்ணி மாட்டுன திருடர்கள்… கையும் களவுமா பிடித்து பொதுமக்கள் செஞ்ச தரமான சம்பவம்..!!”
டெல்லியின் நரேலா பகுதியில் உள்ள DDA பிளாட்களில் தொடர்ச்சியாக நடைபெறும் திருட்டுச் சம்பவங்களால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த பிளாட்களில் பெரும்பாலான வீடுகள் காலியாக இருப்பதையும், சரியான பாதுகாப்பு வசதிகள் இல்லாததையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு திருடர்கள் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் திருட்டு தொடர்பாக இரண்டு FIR-கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையிலும், திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
சமீபத்தில், அப்பகுதி மக்களே சில சந்தேகத்திற்குரிய திருடர்களைப் பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அந்தத் திருடர்களிடமிருந்து மின்சாரக் கம்பிகள் (Wires) கைப்பற்றப்பட்டதாகவும், அவர்கள் திருடிய மின்சாரக் கம்பிகளைத் தங்களது உடலிலேயே சுற்றிக் கொண்டு கடத்த முயன்றதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த விசித்திரமான சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெருமளவில் மக்கள் கூடி, பிடிபட்ட நபர்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள DDA பிளாட்களின் பாதுகாப்பு முறைகள் குறித்தப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை மற்றும் DDA அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சில அதிகாரிகளிடம் பேசியபோது, “பொதுமக்களே தங்களது பாதுகாப்பைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறியதாகத் தகவல்கள் வெளியானதால், குடியிருப்புவாசிகள் மிகுந்த ஆத்திரமடைந்துள்ளனர். எனவே, காலியாக உள்ள பிளாட்களைக் கண்காணிக்கவும், நரேலா பகுதியில் காவல்துறை ரோந்துப் பணியை தீவிரப்படுத்தவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிடிபட்ட நபர்களிடம் காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
