CRIME
கொடூரம்..! கள்ளக்காதலியின் மகனை கழுத்தை நெரித்து கொன்ற பாவி… தப்பிக்க மொட்டை அடித்து சாமியார் வேடத்தில் சுற்றிய கள்ளக்காதலன்.. கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!
சென்னை கோயம்பேடு நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பூவரசி (28) என்ற பெண், தனது கணவரைப் பிரிந்து 9 வயது மகன் தருணுடன் வசித்து வந்தார். தருண் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இதற்கிடையில், பூவரசிக்கு தமிழ்ச்செல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல் வசித்து வந்தனர்.
கடந்த மாதம் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குப் பூவரசியும், தமிழ்ச்செல்வனும் சென்றபோது, அங்கிருந்த சில பெண்கள் தமிழ்ச்செல்வனை ஆபாசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைப் பூவரசி தட்டிக்கேட்காததால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன், வீட்டிற்குச் சென்று கள்ளக்காதலியின் மகனான சிறுவன் தருணின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர், இதுகுறித்து பூவரசியிடம் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துவிட்டு அவர் அங்கிருந்து தப்பியோடினார்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், குற்றவாளி தமிழ்ச்செல்வன் திருவண்ணாமலையில் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் தன்னை அடையாளம் கண்டு பிடிப்பதில் இருந்து தப்பிப்பதற்காக, அவர் தலையை மொட்டை அடித்துக் கொண்டு சாமியார் வேடத்தில் சுற்றித் திரிந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தனிப்படை போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
