CRIME
“அவங்கள சும்மா விடக்கூடாது…” நாட்டையே உலுக்கிய ‘ப்ளூ டிரம்’ கொலை வழக்கு… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
கடந்தாண்டு இந்தியாவையே உலுக்கிய, உத்தரப்பிரதேச முன்னாள் வணிகக் கடற்படை அதிகாரி சௌரப் ராஜ்புத் கொலை வழக்கில், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது கள்ளக்காதலன் சாஹில் சுக்லா ஆகிய இருவரும் குற்றவாளிகள் என மீரட் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு மற்றும் தண்டனை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பும், சௌரப்பின் குடும்பத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்தாண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த வணிக கடற்படை அதிகாரியான சௌரப் ராஜ்புத்தை (29) அவரது மனைவி முஸ்கானும், மனைவியின் கள்ளக்காதலன் சாஹிலும் இணைந்து கொடூரமான முறையில் கொலை செய்தனர். கொலைக்கு பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி, உறுப்புகளை நீல நிற ட்ரம் ஒன்றில் போட்டு, அதனை சிமெண்ட் கலவை ஊற்றியும் மூடினர்.
கொலை செய்யப்பட்ட சௌரப் ராஜ்புத்தின் உடல் கண்டெடுக்கப்பட்ட விதம் மற்றும் கொலையாளிகளின் கொடூரமான செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி முஸ்கான் மற்றும் சாஹிலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் முடிவில், இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, மீரட் மாவட்ட நீதிமன்றம் இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது.
