“நான் அவளைக் கொ***ன் மாமா…” நடு ரூம்ல… நள்ளிரவில் போன் போட்டு மாமனாரை கதறவிட்ட ஆட்டோ டிரைவர்..! பதைபதைக்க வைக்கும் நிஜ சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் அவளைக் கொ***ன் மாமா…” நடு ரூம்ல… நள்ளிரவில் போன் போட்டு மாமனாரை கதறவிட்ட ஆட்டோ டிரைவர்..! பதைபதைக்க வைக்கும் நிஜ சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேசம் மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ரசூல்புரி பகுதியில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் இடையே நடந்த ஒரு கோரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநரான சந்தீப், தனது மனைவி சீமாவைக் கொலை செய்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியே பரபரப்பில் மூழ்கியுள்ளதுடன், இவர்களின் 8 வயது மகளான சித்தி என்ற சிறுமி தன் தாயை இழந்து தவித்து வருகிறார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை தர்மேஷ் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட சந்தீப், கொலை செய்த உடனே நள்ளிரவில் தனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்தார். அப்போது, அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாகவும், தான் சீமாவைக் கொன்றுவிட்டதாகவும், உடலை நடு அறையில் விட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்தத் தகவல் கிடைத்து சுமார் ஏழு மணி நேரத்திற்குப் பிறகு குடும்பத்தினர் அங்கு வந்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. உடனே, அப்பகுதி மக்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதியான பிரிஜேஷ் உதவியுடன் அவசர உதவி எண் 112-க்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

தகவலின் பேரில் நகர காவல் நிலையப் போலீசார், ஏ.எஸ்.பி விவேக் திவாரி மற்றும் சி.ஓ ஆப்தாப் ஆலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசாரின் முன்னிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, சீமாவின் சடலம் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, வீட்டில் வேறு நபர்கள் வந்து செல்வது தொடர்பாகக் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது தலைமறைவாகியுள்ள சந்தீப்பைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in