CRIME
“என்னடா நடக்குது இங்க..!” பயணியின் பையைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
மேற்கு வங்காளத்தின் கரக்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் ஒரு பயணியின் பையில் இருந்து கணக்கில் வராத ரூ.1.40 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜன் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் காலை 11 மணியளவில் கரக்பூர் ரயில் நிலையத்திற்கு வந்திறங்கிய அந்தப் பயணி, அங்கிருந்து ஹவுரா செல்வதற்காகக் காத்திருந்தபோது பாதுகாப்புப் படையினரின் தீவிர கண்காணிப்பில் சிக்கியுள்ளார். சந்தேகத்தின் பேரில் அவரது பையைத் திறந்து சோதனையிட்ட அதிகாரிகளுக்கு, உள்ளே கட்டுக் கட்டாகப் பணம் இருந்ததைக் கண்டு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட அந்தப் பயணி ராகுல் சோனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வளவு பெரிய தொகையை ரயிலில் கொண்டு வந்ததற்கான எவ்வித முறையான ஆவணங்களும் அவரிடம் இல்லாததால், அந்த ரூ.1.40 கோடி ரொக்கத்தையும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் உடனடியாகப் பறிமுதல் செய்தனர். இந்தத் துணிகரப் பணக் கடத்தலின் பின்னணியில் ஏதேனும் ஹவாலா கும்பலுக்குத் தொடர்பிருக்கிறதா அல்லது தேர்தல் முறைகேடுகளுக்காக இந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறை மற்றும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
