“என்னை விட்டுடுங்க கை உடைஞ்சிடும்..” ஓடும் ரயிலில் ஜன்னல் வழியே கைவரிசை காட்டிய திருடன்.. பயணிகள் செய்த காரியத்தை பாருங்க.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னை விட்டுடுங்க கை உடைஞ்சிடும்..” ஓடும் ரயிலில் ஜன்னல் வழியே கைவரிசை காட்டிய திருடன்.. பயணிகள் செய்த காரியத்தை பாருங்க.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Published

on

டெல்லியில் ஓடும் ரயிலில் ஜன்னல் வழியாகப் பயணிகளின் மொபைல் போனைத் திருட முயன்ற திருடன் ஒருவனைப் பயணிகள் கையும் களவுமாகப் பிடித்து, ஓடும் ரயிலின் வெளிப்பகுதியில் தொங்கவிட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து ரயில் மெதுவாகப் புறப்பட்டுச் செல்லத் தொடங்கியபோது, தண்டவாளத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த அந்தத் திருடன், ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த பயணியின் கைபேசியைப் பறிக்க முயன்றுள்ளான். ஆனால், சுதாரித்துக்கொண்ட பயணிகள் அவனது கைகளை ஜன்னல் வழியாக உள்ளிழுத்து இறுக்கமாகப் பிடித்துக்கொண்டனர். ரயில் வேகம் எடுத்த நிலையிலும், பயணிகள் அவனது கைகளை விடாமல் பிடித்துக்கொண்டதால், அவன் ஓடும் ரயிலின் வெளிப்பகுதியில் ஆபத்தான முறையில் தொங்கியபடியே பல கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

பயணிகள் அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு ரயிலின் வெளியில் தொங்கவிட்டிருக்கும் இந்த ஆபத்தான காட்சியைக் காரில் சென்ற சிலர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, அது தற்போது இணையத்தில் தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “என்னை விட்டுவிடுங்கள், கைகள் உடைந்துவிடும்” என்று அந்தத் திருடன் உயிருக்குப் பயந்து அலறிய பிறகும், பயணிகள் அடுத்த ரயில் நிலையம் வரும் வரை அவனது கைகளை விடவில்லை. இறுதியில், ரயில் அடுத்த நிலையத்தை அடைந்ததும் டெல்லி ரயில்வே காவல் துறையினர்அவனைக் மீட்டு, ரயிலில் திருட முயன்ற குற்றத்திற்காகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in