LATEST NEWS
ஐயோ கொடுமையே..! ஓடி ஆடி விளையாடிய குழந்தைக்கு 10 நிமிடங்களில் என்ன ஆனது..? வகுப்பறையில் நடந்த மர்ம மரணம்.. பதற வைக்கும் பின்னணி..!!
கிழக்கு டெல்லியின் மயூா் விஹாா் பகுதியில் அமைந்துள்ள லவ்லி பப்ளிக் பள்ளியில் மிகவும் துயரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அங்கு 3ஆம் வகுப்புப் படித்து வந்த 9 வயது சிறுமி, வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். விளையாட்டுப் நேரம் முடிந்து வகுப்பறைக்குத் திரும்பிய சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விரிவான விசாரணைக்குப் பின்னரே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கிடைத்த தகவலின்படி, நவம்பர் 4, 2026 அன்று காலை சுமார் 9:52 மணியளவில் லவ்லி பப்ளிக் பள்ளி மாணவி குறித்த தகவல் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்தது. இதையடுத்து, சுயநினைவற்ற நிலையில் இருந்த சிறுமி உடனடியாக நிர்மாண் விகாரில் உள்ள மாலிக் ரேடிக்ஸ் ஹெல்த் கேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையின் போது, பள்ளி வகுப்பறையின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், சிறுமி திடீரென தரைமீது மயங்கி விழுவது பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பாண்டவ் நகர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற டிஜிட்டல் மற்றும் பௌதீக ஆதாரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இறந்த சிறுமியின் பெற்றோர், உடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் அதிகாரப்பூர்வ வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
