CRIME
“என் மகள திட்டமிட்டு கொன்னுட்டாங்க..!” 5 வினாடிகளில் சுருண்டு விழுந்த புதுப்பெண்.. ஹோட்டலில் நடந்தது என்ன..? நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள ஒரு ஹோட்டலில், திருமணமாகி நான்கு மாதங்களே ஆன முஸ்கான் என்ற புதுப்பெண், ஹோட்டல் அறையின் வாசல் அருகே நின்றுகொண்டிருந்த போது வெறும் 5 வினாடிகளில் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முஸ்கானின் கைகளில் வைக்கப்பட்டிருந்த மருதாணி நிறம் கூட இன்னும் மறையாத நிலையில், அவரது இந்த மர்ம மரணம் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது. முஸ்கான் தனது கணவர் நிலேஷுடன் ஹோட்டலுக்கு வருவதும், அங்கு வந்த சில நொடிகளிலேயே திடீரென தரையில் விழுந்து மயக்கமடைவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது.
இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக முஸ்கானின் தந்தை போலீசாரிடம் பரபரப்புக் குற்றம் சாட்டியுள்ளார். தனது மகளை அவளது அத்தை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு, கணவர் நிலேஷ் திட்டமிட்டு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் இது திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் குடும்பத்தினர், கணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்தச் சிசிடிவி ஆதாரம் மற்றும் தந்தையின் புகாரின் அடிப்படையில் ஜான்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
