LATEST NEWS
“ஐயோ நீங்க Bad டச் பண்ணுறீங்க” ரயிலில் எதிர்ப்பு தெறிவித்த இளம்பெண்… அடுத்த நொடியே செருப்பால் அடித்து அரங்கேறிய கொடூரம்.. கையை இழந்த பரிதாபம்..!!
மும்பையில் போரிவலி பகுதியில் இருந்து விரார் நோக்கிச் சென்ற உள்ளூர் ரயிலில் நவம்பர் 4-ஆம் தேதி பயணம் செய்த இளம்பெண் ஒருவரிடம், சக பயணி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்துத் தனது காலணியால் தாக்கியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரயில் நாய்காவ் நிலையத்தை அடைந்ததும், நடைமேடையில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அந்த நபர், பெண்ணை ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான இடைவெளியில் தள்ளிவிட்டுள்ளார்.
இதில் தண்டவாளத்தில் விழுந்த அந்தப் பெண் எழுந்து ஏற முயன்றபோது ரயில் நகர்ந்ததால், அவரது இடது கை சக்கரத்தில் சிக்கி முழங்கைக்குக் கீழே துண்டிக்கப்பட்டதோடு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு கூட்ட நெரிசலைப் பயன்படுத்தித் தப்பியோடிய நபரை, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் ரயில்வே போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்துள்ளனர்.
தனது குடும்பப் பொறுப்புகளைத் தானே சுமந்து வந்த நிலையில் கையை இழந்துவிட்டதால் தனக்கு நீதி வேண்டும் என மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தப் பெண் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சியினரின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பாலியல் தொல்லை மற்றும் கொலை முயற்சி ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
