CRIME
அடக்கொடுமையே..! BMW காரை மறித்து ரூ.5,000 கேட்டு மிரட்டிய கும்பல்… யூடியூபர் எடுத்த வீடியோவால் மாட்டிக்கொண்ட 4 பேர்..! பிரபல கஃபே வாசலில் நடந்த ஷாக்கிங் சம்பவம்..!!
ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல கஃபே ஒன்றின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரின் உரிமையாளரை, நான்கு நபர்கள் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. அவர்கள் அந்த கார் உரிமையாளரை மிரட்டி, அவரிடமிருந்து உடனடியாக ரூ.5,000 பணம் தருமாறு கேட்டு கட்டாயப்படுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அந்நேரத்தில் அங்கு இருந்த யூடியூபர் ஒருவர், இந்த மிரட்டல் சம்பவத்தையும் இரு தரப்பினரிடையே நடந்த வாக்குவாதத்தையும் தனது கேமராவில் துல்லியமாக வீடியோ படம்பிடித்துள்ளார். பின்னர், அந்த வீடியோ ஆதாரத்தை சமூக வலைத்தளமான X தளத்தில் பகிர்ந்து, தெலங்கானா மாநில காவல்துறை தலைமை இயக்குனர் சி.வி. ஆனந்த் அவர்களின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு சென்றார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து உடனடியாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இறுதியில், போடுப்பால் பகுதியில் தலைமறைவாக இருந்த நான்கு பேரையும் அடையாளம் கண்டறிந்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
